Saturday, November 20, 2010

Mystic Smile - மந்திரப்புன்னகை

1. மந்திரப்புன்னகை - 1986

சத்யா மூவீஸ் தயாரிப்பில் வி. தமிழழகன் இயக்கி வெளிவந்த திரைப்படம் மந்திரப்புன்னகை; சத்யராஜ், நதியா, ரகுவரன், சுரேஷ், பேபி சுஜிதா இதில் நடித்திருந்தனர். மந்திரப்புன்னகை DVD corver


2. சத்யராஜ் + குழந்தை நட்சத்திரம்

சத்யராஜ் தொடர்ச்சியாக இரு படங்களில் சுஜிதாவுடன் (குழந்தை நட்சத்திரத்திரமாக) நடித்தார், ஒன்று 'மந்திரப்புன்னகை' மற்றையது 'பூ விழி வாசலிலே'. இன்னுமோர் சத்யராஜ் + குழந்தை நட்சத்திர திரைப்படம் 'என் பொம்ம குட்டி அம்மாவுக்கு'

3. மந்திரப்புன்னகையோ பாடல் காட்சி

1986 இல் இளையராஜா இசையில் மந்திரப்புன்னகையில் வரும் 'மந்திரப்புன்னகையோ' பாடல் காட்சி கிழே


4. பெரிய சுஜிதாவும் சின்னத் திரையும்

இன்று சுஜிதா சின்னத்திரை நட்சத்திரமாகி வீடுகளில் உள்ள பெண்களை எல்லாம் அழ வைத்துக் கொண்டிருப்பது (மெகா தொடர்களில் தான் ) வேற கதை. இதோ ஒரு சாம்பிள்.

"என்ன கொடுமை சரவணா"

5. மந்திரப்புன்னகை - 2010 - Trailer


6. 'என்ன குறையோ ..' பாடல்

கவிஞர் அறிவுமதி எழுதி வித்தியாசாகர் இசையில் சுதாரகுநாதன் பாடிய... மந்திரப்புன்னகை திரைப்பட  பாடல்  'என்ன குறையோ ..'

நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாழாத துன்பம் நோ்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்
முழு பாடல் இங்கே

7. விமர்சனம்

கரு.பழனியப்பனுக்கு முதல் படம் ( நடிகராக ) என்பதை காட்சிக்கு காட்சி தெரிவு படுத்துகிறார். அவரின் தாடிமுகம் செட்டாயிருக்கலாம் ஆனால் சுத்தமாக பாடி லேங்குவேஜ் இல்லை.. ஒரு வித கான்ஷியஸோடுதான் படம் முழுவதும் வளைய வருகிறார். முக்கியமாய் அருமையான டயலாக்குகள் எல்லாவற்றையும் மாடுலேஷன், பாடி லேங்குவேஜ் இல்லாமல் ஒருவித மனப்பாடத் தன்மையோடு இருப்பது கேரக்டரோடு ஒன்றவிடாமல் செய்கிறது.

ஒரு அல்ட்ரா மார்டன் பெண்ணாக மீனாட்சி. ஆரம்ப காட்சிகளில் தெரியும் அந்நியத்தனம் போக, போக மறைந்து நந்தினியாகவே மாறிவிடுகிறார். ஆனால் பாவம் மிக ஸ்ட்ராங்கான கேரக்டராய் கொண்டு வந்து.. கேபிள்ஷங்கர் விமர்சனம் இங்கே

8. ஆடியோ ரிலீஸ்

சரி அத விடுங்க சார், ஆடியோ ரிலீஸ் அன்னிக்கு டைரக்டர் ஹரி சார் ஒரு கருத்து சொன்னாரே கவனிச்சீங்களா, இங்கே இருக்கு அந்த கிளிப்


9. மீனாட்சியின மந்திரப்புன்னகை எது ?

மீனாட்சியின்  மந்திரப்புன்னகை எது, முதலாவது படத்தில் உள்ளதா? அல்லது இரண்டவது படத்தி உள்ளதா? நிச்சயமாக மூன்றாவது படத்தில் இல்லை.
 1
2
3

மூன்றாவது படத்தில் உள்ள  மீனாட்சிக்கும் மந்திரப்புன்னகை மீனாட்சிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

No comments:

Post a Comment