Monday, November 22, 2010

Body Guard - காவல்காறன்

இந்த “தலை” நல்லா இருக்கு “தலைவா” என்று சொல்லியே யாரோ “தளபதி”க்கு உலை வச்சிட்டாங்கையா.
உண்மையை சொல்லுங்க இது நல்லா இருக்கா இல்லையா?

Saturday, November 20, 2010

Mystic Smile - மந்திரப்புன்னகை

1. மந்திரப்புன்னகை - 1986

சத்யா மூவீஸ் தயாரிப்பில் வி. தமிழழகன் இயக்கி வெளிவந்த திரைப்படம் மந்திரப்புன்னகை; சத்யராஜ், நதியா, ரகுவரன், சுரேஷ், பேபி சுஜிதா இதில் நடித்திருந்தனர். மந்திரப்புன்னகை DVD corver


2. சத்யராஜ் + குழந்தை நட்சத்திரம்

சத்யராஜ் தொடர்ச்சியாக இரு படங்களில் சுஜிதாவுடன் (குழந்தை நட்சத்திரத்திரமாக) நடித்தார், ஒன்று 'மந்திரப்புன்னகை' மற்றையது 'பூ விழி வாசலிலே'. இன்னுமோர் சத்யராஜ் + குழந்தை நட்சத்திர திரைப்படம் 'என் பொம்ம குட்டி அம்மாவுக்கு'

3. மந்திரப்புன்னகையோ பாடல் காட்சி

1986 இல் இளையராஜா இசையில் மந்திரப்புன்னகையில் வரும் 'மந்திரப்புன்னகையோ' பாடல் காட்சி கிழே


4. பெரிய சுஜிதாவும் சின்னத் திரையும்

இன்று சுஜிதா சின்னத்திரை நட்சத்திரமாகி வீடுகளில் உள்ள பெண்களை எல்லாம் அழ வைத்துக் கொண்டிருப்பது (மெகா தொடர்களில் தான் ) வேற கதை. இதோ ஒரு சாம்பிள்.

"என்ன கொடுமை சரவணா"

5. மந்திரப்புன்னகை - 2010 - Trailer


6. 'என்ன குறையோ ..' பாடல்

கவிஞர் அறிவுமதி எழுதி வித்தியாசாகர் இசையில் சுதாரகுநாதன் பாடிய... மந்திரப்புன்னகை திரைப்பட  பாடல்  'என்ன குறையோ ..'

நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாழாத துன்பம் நோ்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்
முழு பாடல் இங்கே

7. விமர்சனம்

கரு.பழனியப்பனுக்கு முதல் படம் ( நடிகராக ) என்பதை காட்சிக்கு காட்சி தெரிவு படுத்துகிறார். அவரின் தாடிமுகம் செட்டாயிருக்கலாம் ஆனால் சுத்தமாக பாடி லேங்குவேஜ் இல்லை.. ஒரு வித கான்ஷியஸோடுதான் படம் முழுவதும் வளைய வருகிறார். முக்கியமாய் அருமையான டயலாக்குகள் எல்லாவற்றையும் மாடுலேஷன், பாடி லேங்குவேஜ் இல்லாமல் ஒருவித மனப்பாடத் தன்மையோடு இருப்பது கேரக்டரோடு ஒன்றவிடாமல் செய்கிறது.

ஒரு அல்ட்ரா மார்டன் பெண்ணாக மீனாட்சி. ஆரம்ப காட்சிகளில் தெரியும் அந்நியத்தனம் போக, போக மறைந்து நந்தினியாகவே மாறிவிடுகிறார். ஆனால் பாவம் மிக ஸ்ட்ராங்கான கேரக்டராய் கொண்டு வந்து.. கேபிள்ஷங்கர் விமர்சனம் இங்கே

8. ஆடியோ ரிலீஸ்

சரி அத விடுங்க சார், ஆடியோ ரிலீஸ் அன்னிக்கு டைரக்டர் ஹரி சார் ஒரு கருத்து சொன்னாரே கவனிச்சீங்களா, இங்கே இருக்கு அந்த கிளிப்


9. மீனாட்சியின மந்திரப்புன்னகை எது ?

மீனாட்சியின்  மந்திரப்புன்னகை எது, முதலாவது படத்தில் உள்ளதா? அல்லது இரண்டவது படத்தி உள்ளதா? நிச்சயமாக மூன்றாவது படத்தில் இல்லை.
 1
2
3

மூன்றாவது படத்தில் உள்ள  மீனாட்சிக்கும் மந்திரப்புன்னகை மீனாட்சிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

The Facebook - தி சோசல் நெற் வேக்

1. மார்க் ஜூகர்பெர்க் கதை

தி சோசல் நெற் வேக் The Social Network எனப்படும் ஆங்கிலப்படம் இப்பொழுது திரையிடப்படுகின்றது. கற்பனையான கதை அல்ல இது, நிஜ‌ம். யார் யாரையோ யார் யாருக்கோ நண்பர்களாக்கிய - facebook.com - மார்க் ஜூகர்பெர்க் கதை.

2. facebook.com - FB ??
ஃபேஸ்புக் - FB - facebook.com - என்றால் என்ன என்று தெரியாதவர்கள் - தயவு செய்து, இத்துடன் நிறுத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்க்கவும்.
நன்றி மீண்டும் வருக.


3. நிஜ மார்க் ஜூகர்பெர்கும் நடிகர் மார்க் ஜூகர்பெர்கும்


சிறிய படத்தில் இருப்பவர் நிஜ மார்க் ஜூகர்பெர்க் - Mark Zuckerberg
மற்றவா் நடிகர் Jesse Eisenberg 

4. ஃபேஸ்புக் என்னுடைய ஐடியா

"ஃபேஸ்புக்" என்னுடைய ஐடியா" என்று ஒரு குழுவும்... பில்லியன் டாலர் மதிப்பில் புரளும் "ஃபேஸ்புக்"கின் உண்மையான நிறுவனர் நான்தான் எனக்குரிய பாகம் என்னைச் சேரவில்லை என்று சேர்ந்து பிஸினஸ் துவங்கிய நெருங்கிய நண்பர்களின் கடுமையான வழக்குவாதத்துடன் படம் ஆரம்பிக்கிறது... முன்னும் பின்னும் ஊஞ்சல்போல பயணித்து இந்த வழக்குமன்றத்தில் தொடர்ந்து சங்கமிப்பதாய் நேர்த்தியான திரைக்கதை......, திரைப்படத்தின் மொத்தக் கதையையும் இங்கே படிக்கலாம்

5. திறமையான திரைக்கதையமைத்த ஆரோன் சார்கின்னை பாராட்டத்தான் வேண்டும்

கம்ப்யூட்டர் புலியான மார்க்கின் காதல் முறிவுக்கு பின் தான் படிக்கும் ஹாவர்ட்டின் லோக்கல் நெட்வொர்கை உடைத்து facemash.com என்றொரு இணையதளத்தை உருவாக்கி தங்கள் ஹாவர்டில் படிக்கும் மாணவிகளின் போட்டோக்கள் டேட்டாபேஸை திருடி மாணவர்களிடையே ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட, அதன் காரணமாக அவனை ஆறு மாதம் படிப்புக்கு தடை பெறுகிறான்

"இம்மாதிரியான நிஜ வாழ்க்கை கதைகளில் இருக்கும் சமகால காதல், பணம், துரோகம், செக்ஸ் போன்ற  சுவாரஸ்யங்களை வைத்து திறமையான திரைக்கதையமைத்த ஆரோன் சார்கின்னை பாராட்டத்தான் வேண்டும்"
முழு விமரிசனம் இங்கே

6. சரி இப்போ facemash.com என்னாயிற்று ?
This page under construction - coming soon என்று சொல்லி கடையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

7. 'The Social Network' movie trailer
8. பேஸ் புக் பாடல்
எம்மிரு நண்பர்கள் உலகில் பிரபல மானவற்றைப் பாடியே பிரபல மானவா்கள். இவர்களின் பேஸ் புக் பாடலை கீழே காண்க


9. ஃபேஸ்புக் லைவ்

ஃபேஸ்புக் இக்கு உயிர் இருந்தால் ஆண்களின் ஃபேஸ்புக் கணக்கு எல்லாம் பெண்கள் பின்னல் நாடு வீதியில் அலையும் என்கிறது கிழே உள்ள படம், இதற்கு வேறு அர்த்தம் இருந்தால் சொல்லவும்

Saturday, October 23, 2010

“ழாவி“ன்ன என்ன?

பாஸ்

சொல்லுங்க பாஸ்

அபிதாண சிந்தாமணியில் இருந்து விக்கிப்பீடியா வரைக்கும் தேடிப்பாத்திட்டன்.

தனித்தனியா தேடினா தமிழ் எழுத்துன்னு வருது, மாத்தி எழுதி பாத்தா “விழா“ன்னு வருது. எந்த விழான்னு தெரியல, எங்க போய் விழுறதெண்டு தெரியல.

ஆத்தி சூடி கொன்றை வேந்தனு பார்த்தா இதப்பத்தி சொல்லல. இடைச்சங்கம் கடைச்சங்கம்ல கூட இல்ல.

வைரமுத்துவையோ வாலியையோ கேட்கலாம்னா, அதுக்கிடைல மண்ட வெடிச்சிரும் போல இருக்கு

ஏன் பாஸ் ராத்திரி மறைவா ஒன்னுக்குப் போறப்ப குழாவி ஏதாச்சும் குத்திச்சா?

சொல்லுங்க பாஸ், மனுசன் துாங்க வேணாமா

நானா எதாவது இயற்றி சொல்றதுக்குள்ள நீங்களே சொல்லீருங்க

கலோ,

கலோ, லைன்ல இருக்கீங்களா இல்லையா?அதையாச்சும் சொல்லித் தொலைங்க

”ம்”